Monday 23 April 2012

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறாது.

முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. அதே சமயம் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத் (தொலைத்தூர கல்வி)  தேர்வு மற்றும் விடுமுறை காரணங்களுக்காக தள்ளி வைக்க ஆசிரியர்களின் சார்பில் பல்வேறு தரப்பு  அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. 

இது குறித்து மாநில அளவில் முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான பயிற்சியில் பங்குபெற்ற ஆசிரியர் ஒருவர் கூறுகையில் ஊராட்சி ஒன்றிய / அரசு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி கிடையாது எனவும், அதே சமயம் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி செயலர் பயிற்சி அரங்கில் தெரிவித்தாக கூறினார்.

மேலும் 25.04.2012 அன்று முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறை சம்பந்தமாக அறிமுகப்பயிற்சி  RESOURCE PERSON TRAINING ஒரு நாள் நடைபெறும் என்றும், தொடக்க / அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 1 முதல் 5 வகுப்பு நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி 26.04.2012 மற்றும் 27.04.2012 ஆகிய இரண்டு கட்டங்களாக மாநில முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...