Monday, 23 April 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.

தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்துவழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.
1. ஹரப்பா நாகரிகம் - நகர நாகரிகம்
2. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31
3. இடைச்சங்கம் நடைபெற்ற நகரம் - கபாடபுரம்
4. பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி
5.சுனாமி என்ற சொல் ஜப்பான் மொழியிலிருந்து வந்தது.
6. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013 மில்லிபார்களாகும்
7.பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது - படிய வைத்தல் நிலத்தோற்றம்.
8. பான்ஜியா 7 பெரிய தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.
9. துளசிதாசர் எழுதிய நூல் - இராமசரிதமானஸ்
10. விஜய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1336
11. இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட கவிஞர் - அமிர்குஸ்ரு
12.முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் - பிருதிவிராசன்
13. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் - கரிகால சோழன்
14.தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்
15. பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு - பூமத்திய ரேகை
16. தெற்கு வடக்காக செல்லும் கோடு - தீர்க்கக் கோடு
17. பூமியின் மொத்த கோண அளவு - 360º
18. 0º டிகிரி தீர்க்கக் கோடு என்பது - அட்சக்கோடு
19. சூரிய குடும்பத்தின் நாயகன் - சூரியன்
20. சந்திரன் பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.
21. பல கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை அண்டம் என்பர்
22. பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது.
23. மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
24. இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
25. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்
26.தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் - யுரேனஸ்
27. பூமியின் அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.
28. நாளந்தா பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
29. இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்
30. மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா
31. பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் எனஅறு கூறியவர் - வாக்கர்
32. சாலைப் போக்குவரத்தின் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு - 1989
33. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
34. உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8.
35. தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - நவம்பர் 19
36. தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட வருடம் -1844
37. பருத்தி கரிசல் மண்ணில் அதிகமாக விளைகிறது.
38. நெல் ஒரு அயனமண்டல பயிராகும்.
39. மேக்னடைட் தாதுவை கொண்ட கனிமம் - இரும்பு
40. இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள இடம் - பக்ராநங்கல்
41. பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு - 1757
42. கி.பி. 1857-ம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.
43. இரும்பு பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் - டல்ஹெசி
44. நிலையான நிலவரித் திடிடத்தை அறிமுகப்படுத்தியவர் -  காரன்வாலிஸ்
45. ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1773
46.அட்லாண்டிக் பேராழி நீண்ட S வடிவம்
47. இந்திய உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி
48. பன்னாட்டு நீதிமன்றம் ஹாலந்து நாட்டில் உள்ள ஹேக் நகரில் உள்ளது.
49. இந்திய அரசு கல்வி உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள் - 1 ஏப்ரல் 2010
50. பொருளியலின் தந்தை - ஆடம் ஸ்மித்
51. நாடுகளின் செல்வம் என்ற  புத்தகத்தின் ஆசிரியர் - ஆடம் ஸ்மித்
52. கல்வியில் செய்யப்படும் முதலீடு மனிதவளம் மூலதனம் எனப்படும்.
53. பொதுப்பேரவையில் தலைவராக 1954 -ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் - திருமதி. விஜயலட்சுமி பண்டிட்
54. முதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு - கி.பி.1526
55. மாபெரும் வாணிப மையமான கான்ஸ்டாண்டி நோபிள் ஆட்டோமானிய துருக்கியர்களால் கி.பி.1453-ல் கைப்பற்றப்பட்டது.
56. ஆங்கிலப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் - இராபர்ட் கிளைவ்
57. சரஸ்வதி மகால் கட்டியவர் - இரண்டாம் சரபோஜி
58. வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1806

No comments:

Post a Comment

Here's how much printing cost of ₹2000, ₹500, ₹200 notes fell in 2018-19

Cost of a  ₹ 2000 currency note fell 65 paise or 18.4 per cent in 2018-19  (Reuters) Introduced after demonetisation in November 2...