Saturday 26 May 2012

டி.இ.டி., தேர்வில் யாருக்கு விலக்கு? ஆசிரியர் பலரும் குழப்பம்.

டி.இ.டி., தேர்வில் இருந்து,  யார், யாருக்கு விலக்கு என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான விளக்கம் அளிக்காததால், நேற்று ஏராளமானோர் டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.
ஆகஸ்ட் 23, 2010க்குப் பின் பணியில் சேர்ந்த, அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும் என, டி.ஆர்.பி., ஆரம்பத்தில் தெரிவித்தது. அறிவிப்பு தற்போது, என்.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, ஆகஸ்ட் 23, 2010க்கு முன், ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிக்கை மற்றும் இதர பணிகள் நடந்து, அதன்பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை என, 22ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.
நாளிதழ்களில், மிகச்சிறிய அளவில், விளம்பரமாக இந்த அறிவிப்பு வெளியானது. பலருக்கு இது தெரியவில்லை; விளம்பரத்தை பார்த்த ஆசிரியர்களும் சரிவர புரியாமல், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் விளக்கம் கேட்டபடி உள்ளனர். மேலும், இவ்வளவு பெரிய அறிவிப்பை, பெரிய அளவில் வெளியிடாதது ஏன் என்றும், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
படையெடுப்பு இது தொடர்பாக விளக்கம் கேட்க, நேற்று ஏராளமானோர் டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு படையெடுத்தனர். அவர்களிடம், டி.ஆர்.பி., அலுவலர்கள் விளக்கிக் கூறினர். விலக்கு அளிக்கப்பட்ட ஆசிரியர் பெயர் பட்டியலை, இணையதளத்தில் டி.ஆர்.பி., வெளியிட வேண்டும்; சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என்பது, விண்ணப்பதாரர்களின் கருத்தாக உள்ளது.
தெளிவான விளக்கம் இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: அறிவிப்பில், எங்களது விளக்கத்தை தெளிவாகக் கூறியுள்ளோம்.
ஆகஸ்ட் 23, 2010க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் பணி நியமனம் தொடர்பான வேலைகள், ஒரு ஆண்டுக்கு முன்பே துவங்கியிருக்கும். இப்படிப்பட்ட ஆசிரியர், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
மொத்தம், 6.50 லட்சம் பேரில், விலக்கு அளிக்கப்பட்டவரின் பெயர் பட்டியலை, தற்போது தேட முடியாது. 27ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தபின், இது தொடர்பாக முழுமையான விளக்கம் தரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...