Sunday 28 October 2012

DEE - RIESI TRAINING AT BENGALURU - VENUE REGARDING

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக் கான பணி இலக்குகள் மற்றும் பணிச் சார்ந்த செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்துதல் சார்பு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதம் ஒரு முறை கடைசி வாரம் நடத்த தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதம் ஒரு முறை கடைசி வாரம் நடத்த தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.

ஆசிரியர்த் தகுதித் மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு

டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Wednesday 3 October 2012

140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி

மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
சமச்சீர் கல்வி திட்டம் வருவதற்கு முன், நான்கு வகை கல்வித் திட்டங்கள் அமலில் இருந்தன. இதில், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை, மொழிப்பாடமாக கற்பதற்கு, வழிவகை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டத்தில், அதற்கு வழியில்லை. இந்தி மொழியை, மொழிப் பாடமாக கற்க முடியாது. அதை, ஒரு விருப்பப் பாடமாகத் தான் கற்க முடியும்.

கல்வி உதவித் தொகை பிரச்சனையில் சஸ்பெண்டான 77 தலைமையாசிரியர்கள் இன்னும் ஒரு வாரத்தில் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை மோசடியில் சஸ்பெண்டான 77 தலைமை ஆசிரியர்கள் விரைவில் பணிக்கு திரும்ப உள்ளதாக ஆசிரியர்கள் வட்டாரங்கள் தெரிவித்தன. நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை 81 லட்சம் முறைகேடு செய்ததாக 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் 51 பேர் பெண்கள். இந்த முறைகேடுக்கு துணைபோன மாவட்ட ஆதிதிராவிடநல அலுவலர் ராமசந்திரன், கண்காணிப்பாளர் உமாபதி ஆகியோரும் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாப நோக்கற்ற சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...