Saturday 12 August 2017

மருத்துவ படிப்பு கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது-ஓரிரு நாட்களில் தரவரிசை பட்டியல் வெளியீடு.

ஓரிரு நாட்களில் தரவரிசை பட்டியல் வெளியீடு மருத்துவ படிப்பு கலந்தாய்வு17-ந்தேதி தொடங்குகிறது | மருத்துவ படிப்பில் சேர தரவரிசை பட்டியல் ஓரிருநாட்களில் வெளியிடவும், 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கவும் மருத்துவதேர்வுக்குழு முடிவு செய்து இருக்கிறதுதமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவகல்லூரிகள் உள்ளனஇந்த கல்லூரிகளில் மருத்துவ படிப்பு படிக்க 2 ஆயிரத்து900 இடங்கள் இருக்கின்றனஇது தவிர ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும், 10சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளனசுயநிதி பல் மருத்துவகல்லூரிகளில் 1,800 இடங்கள் உள்ளனஇந்நிலையில் அனைத்துமாநிலங்களிலும் 'நீட்தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதுஅதன்படி 'நீட்தேர்வுசி.பி.எஸ்.சார்பில் நடத்தப்பட்டதுஇந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்குவிலக்கு கோரி தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் 'நீட்தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என்றால் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், 15 சதவீதம் சி.பி.எஸ்.உள்ளிட்ட மத்திய கல்வி வாரியத்தில் படித்தமாணவர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணைவெளியிட்டதுஇதை எதிர்த்து சி.பி.எஸ்.மாணவர்கள் சென்னைஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்இந்த வழக்கில் தமிழக அரசின்ஆணையை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டதுமேல் முறையீடுமனுவையும் ஐகோர்ட்டு நிராகரித்ததுஇதேபோல் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகஅரசு செய்த மேல் முறையீடு மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதுஜூன்27-ந்தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுமருத்துவ கல்லூரிகளிலும் வழங்கப்பட்டனஇதற்காக 51 ஆயிரம் பேர்விண்ணப்பித்து உள்ளனர்மருத்துவ தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 14-ந்தேதி வெளியிட இருந்ததுஆனால் மாநில அரசின் 85 சதவீத ஒதுக்கீடுஅரசாணையால் தரவரிசை பட்டியல் வெளியிடுவது தாமதமானது.இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிபிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து இந்த வருடம் மட்டுமாவது 'நீட்தேர்வில் தமிழகத்துக்குவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்அதற்கு பரிசீலிப்பதாகபிரதமரும் தெரிவித்தார். 'நீட்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குஅளிக்க ஜனாதிபதி ஒப்புதலுக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமைவரை தமிழகஅரசு காத்திருக்க முடிவு செய்து உள்ளதுஒப்புதல் கிடைத்தால் பிளஸ்-2மதிப்பெண் அடிப்படையிலும்கிடைக்காவிட்டால் 'நீட்தேர்வு மதிப்பெண்அடிப்படையிலும் நாளை அல்லது நாளை மறுநாள் (திங்கட்கிழமை)தரவரிசை பட்டியல் வெளியிடவும், 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கவும்மருத்துவ தேர்வுக்குழு தயாராக உள்ளது. 6 நாட்கள் கலந்தாய்வுக்கு பிறகுசெப்டம்பர் முதல் வாரத்தில் மருத்துவ கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...