Friday 16 March 2018

அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்

வரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் நோக்கத்துடன் வரும் ஆண்டுகளில் திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பில் (எம்பிபிஎஸ்) புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும். தமிழக அரசின் முன்னோடித் திட்டமான முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிநவீன சிகிச்சைகளைப் பெற வகை செய்துள்ளது.
அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆயுஷ்மான் திட்டத்தின் ஓர் அங்கமான தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்துடன் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.1,361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தரம் உயர்த்த, அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் ரூ.66 கோடியே 50 லட்சம் செலவில் 2 நேரியல் முடுக்கிகளும் (Linear Accelerators), 6 சி.டி. ஸ்கேன்களும், 4 எம்ஆர்ஐ ஸ்கேன்களும் வழங்கப்படும். சென்னை அருகே பொன்னேரி மற்றும் நசரத்துப்பேட்டையில் ரூ.24 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிறுவப்படும்.விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.34 கோடி செலவில் புற்றுநோய்க்கான புதிய கோபால்ட் பிரிவுகள் அமைக்கப்படும். 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தற்போதுள்ள கோபால்ட் பிரிவுகள் ரூ.35கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

குழந்தை பராமரிப்பு மையங்கள்

சென்னை அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையிலும் திருவாரூர், கன்னியாகுமரி, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் ரூ.48 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.விருதுநகர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராமநாதபுரம் மாவட்ட தலைமையிட மருத்துவமனைகளில் ரூ.80 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுகள் தொடங்கப்படும்.விழுப்புரம், தருமபுரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இதயம் மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.21 கோடி செலவில் மேலும் 6 கேத் ஆயவகங்கள் (Cath Labs) அமைக்கப்படும்

2 comments:

  1. Looking For RRB Secunderabad Group D Result 2018? Look no more. Here, we are, providing the all RRB Result, may it be Group D, ALP, and RPF right, at one place at railway result.in. So, keep yourself updated with RRB Result.

    ReplyDelete

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...