Tuesday 25 June 2019

கல்வி உதவித்தொகைபட்டப்படிப்பும்... அரசின் சலுகையும்... பட்டப்படிப்பும்...

கல்வி உதவித்தொகைபட்டப்படிப்பும்... அரசின் சலுகையும்...
பட்டப்படிப்பும்... அரசின் சலுகையும்...பள்ளி வாழ்க்கையை முடித்து பட்டப்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் படிப்பு குறித்த அரசின் சலுகைகளையும்தெரிந்து கொள்வது அவசியமான  ஒன்றாகும்பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகைசலுகைகள் எப்படி கிடைக்கிறதோ அதேபோல் கல்லூரியில் சேரும் போதும்  பல்வேறு சலுகைகளை அரசு தருகிறதுஇதுகுறித்த விஷயங்கள் தெரியாத காரணத்தினால் பல மாணவர்கள்சலுகைகளை பெற முடியாமல்  போகிறதுஅரசின் சலுகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.


இலவசக் கல்வி

தற்போது தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் 62 கலை அறிவியல் கல்லூரிகளும், 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 162  அரசுஉதவி பெறும் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறதுஅனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச  கல்விவழங்கப்படுகிறதுஇதேபோல் அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை வரை இலவச கல்வி வழங்கப்படுகிறதுஅரசு  கல்வியியல்  கல்லூரியில் ஆதி திராவிடர்பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முதுகலைப்படிப்பு வரை இலவசம்இதே சலுகை  அரசுஉதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை  பட்டபடிப்பு வரை வழங்கப்படுகிறது.

இலவச பஸ் பாஸ்

பள்ளிகளைப் போலவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள்பொறியியல் கல்லூரிகள்தொழில்நுட்ப கல்லூரி  மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறதுமுதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு சலுகைவாழ்க்கையின் விளிம்பிலிருக்கும்  குடும்பங்களுக்கும் தொழிற்கல்வி சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் அரசு பொறியியல் கல்லூரிகளில்சேர்க்கை  பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தின் மூலம்வழங்கப்படுகிறது.  மேலும்அரசு கலைக்கல்லூரியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு ஊக்க தொகையை வழங்கி வருகிறது.

இது தவிரபாலிடெக்னிக்ஐடிஐடிப்ளமோ மற்றும் நர்சிங் மாணவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வழங்குகிறதுஇதனை பெறுவதற்கு மாணவரின்  பெற்றோர் வருமானம் இரண்டு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க  வேண்டும்அரசுஅரசு உதவி பெறும் பாலிடெக்னிக்ஐடிஐஐடிசி போன்ற கல்வி நிலையங்களில் படிக்க கூடியவராக இருக்க வேண்டும்இதே போல்  பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இளங்கலைமுதுகலை பட்டப்படிப்பிற்காக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறதுஇதைப் பெற பெற்றோர் வருமானம்இரண்டு  லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தொழிற் கல்விதொழில் நுட்பக்கல்விபி.பி.டெக்எம்பிஏஎம்சிஏ மாணவர்களுக்கு மத்திய அரசால் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில்  படிக்கும் மைனாரிட்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முழுவதும் வழங்கப்படும்மற்ற கல்வி நிலையங்களில் படிப்பவர்களுக்குசேர்க்கை கட்டணம்கற்பிப்பு கட்டணம்தேர்வு கட்டணம்நூலக கட்டணம் உட்பட அதிகபட்சமாக ரூ20 ஆயிரம் வரை வழங்கப்படும்இதனை பெறுவதற்கு  மாணவரின் பெற்றோர் வருமானம் இரண்டு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 2ம் வருடம் புதுப்பிக்கும் போது முதல் ஆண்டில் 50 சதவீத  மதிப்பெண் பெற்று அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்மைனாரிட்டி மாணவர்கள் இச்சலுகைகளை பெற  www.momascholarship.gov.inஎன்ற இணைய தளங்களில் விண்ணப்ப படிவங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்ப படிவத்துடன்தேவையான (சாதி சான்றுவருமான சான்றுபேங்க் கணக்கு எண் ஐஎப்எஸ் கோடு உள்படசான்றுகளுடன் குறிப்பிடப்பட்ட  கால கெடுவிற்குள் கல்விநிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...