Sunday 7 July 2019

ஊழலை கண்டுபிடிக்க புதிய ரோபோ!!!



ஸ்பெயின் நாட்டில் ஊழல் குறித்த தகவல்களை தெரிவிக்க புதிய ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டிலுள்ள வல்லாடோவித் பல்கலைக்கழகம், மனிதர்கள் செய்யும் ஊழலை கண்டுபிடிக்கும் வகையில் ரோபோவை உருவாக்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவிடம் நாம் வியாபாரம் குறித்தோ திட்டம் குறித்த தகவல்கள் கொடுத்தாள் அதில் ஊழல் நடந்துள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறியும்.

இந்த ரோபோவில் இதுவரை நடந்த பல்வேறு ஊழல்கள் குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும் அதனையும் நாம் கொடுக்கும் தகவலையும் இந்த ரோபோ சரிபார்க்கும்.

அதேபோல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அந்த கட்சியின் செயல்பாடு குறித்து அவர் பேசியது அந்த ஊழல் குறித்து கூறிய கருத்து என அனைத்தும் இந்த ரோபோ சரிபார்த்து ஊழலை கண்டறியும்.

மேலும் இந்த ரோபோ எந்த அளவுக்கு தவறு நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்த சதவீதத்தை கொடுக்கும்.

அதில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் கண்டிப்பாக ஊழல் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோவில் ஸ்பெயினில் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து நடந்த ஊழல் குறித்த தகவல்கள் இந்த ரோபோவின் நினைவகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...