Monday 17 July 2017

நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவு வெளியீடு உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு 6,709 பேர் தகுதி.

நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவு வெளியீடு உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு 6,709 பேர் தகுதி | உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நாடுமுழுவதும் நடந்த நீட்-எஸ்எஸ் தேர்வில் 6,709 பேர் தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு (Dm, Mch) 1,215 இடங்கள் உள்ளன.
இதில் தமிழகத்தில் மட்டும் 192 இடங்கள் இருக்கின்றன. இவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்த ஆண்டு முதல் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (NEET-SS) கடந்த மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது. தேசிய தேர்வு வாரியம் நடத்திய நீட்-எஸ்எஸ் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் டாக்டர்கள் 1,200 பேர் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், நீட்-எஸ்எஸ் தேர்வு முடிவுகள் www.nbe.edu.in என்ற தேசிய தேர்வு வாரிய இணையதளத்தில்  வெளியிடப்பட்டது. இதில் நாடுமுழுவதும் இருந்து தேர்வு எழுதியவர்களில் 6,709 பேர் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் படிக்க தகுதி பெற்றுள்ளனர். நீட்-எஸ்எஸ் தேர்வில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. கலந்தாய்வு உள்ளிட்ட விவரங்களுக்கு www.mcc.nic.inமற்றும் www.mohfw.nic.in என்ற இணையதளங்களை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். கட்-ஆப் மதிப்பெண்: நீட்-எஸ்எஸ் தேர்வு 200 மதிப்பெண்கள் கொண்டது. உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் படிக்க, தேர்வில் முதலிடம் பிடித்தவர் எடுத்த மதிப்பெண்ணில் 50 சதவீத மதிப்பெண் (கட்-ஆப்) தகுதியாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. கட்-ஆப் மதிப்பெண் 78.25 முதல் 137.50 வரை எடுத்துள்ளனர். தேர்வில் அதிகபட்சமாக பொது மருத்துவம் படிக்க 2,294 பேரும், பொது அறுவைச் சிகிச்சை படிக்க 2,354 பேரும் தகுதி பெற்றுள்ளனர். DOWNLOAD

1 comment:

  1. Looking For RRB Secunderabad Group D Result 2018? Look no more. Here, we are, providing the all RRB Result, may it be Group D, ALP, and RPF right, at one place at railway result.in. So, keep yourself updated with RRB Result.

    ReplyDelete

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...