Wednesday 3 July 2019

குகைக்குள் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்

உலகிலேயே மிகப்பெரிய குகை எது தெரியுமா?

வியட்நாமில் உள்ள 'சான் நீங்' குகைதான் இது சுமார் 8 கிலோ மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட இந்தக் குகையின் உள்ளே ஒரு காடும், ஆறும், குட்டி கடற்கரையும் உள்ளன. இதன் உள்ளே ஒரு 40 மாடி கட்டிடத்தை கட்டி விடலாம் என்றால் இதன் பிரமாண்டத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள், இதில் ஆச்சரியம் என்னவென்றால், 1991 வரை இந்தத் குகை முதன் முதலில் உள்ளூர் விவசாயி ஒருவரால் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது. 


 அதன் வாயிலில் இருந்த மெகா பள்ளத்தைக் கண்டு யாரும் உள்ளே நுழையத் துணியவில்லை. 2009-ல் தான் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் இதன் உள்ளே இறங்கினார்கள். மனிதன் இறங்க அஞ்சிய இந்த நுழைவாயில், 200 மீட்டர் ஆழம் கொண்டதாகும். பாதுகாப்பாக கயிற்றைக் கட்டிக் கொண்டு தான் இதற்குள் இறங்க வேண்டும்.






அதன் மறு முனையில் என்ன இருந்தது என்பதை அறிந்த போது அதை பார்த்தவர்கள் வாய் பிளந்து ஆச்சரியத்தில் உறைந்தார்கள். அதற்கு அடுத்த பக்கம் ஒரு தனி உலகமே இருந்தது.

உள்ளே ஒரு மழை காடே இருந்தன. தனி ஆறு இருந்தது. சிறிய பெரிய குளங்கள் இருந்தன. ஏன், தனக்கென்று ஒரு
தனி கடற்கரையையும், குகை உருவாக்கி இருந்தது. கடலில் உருவாகும் விலை உயர்ந்த முத்துக்களும் இருந்தன. இப்படி 130 கிலோமீட்டருக்கு புதிய உலகமே இருந்தது. இவ்வளவு ரம்யமான குகையை ஆராய்ச்சியாளர்கள் சுற்றிப் பார்க்க ஒரு வாரம் தேவைப்பட்டதாம்.



பலதரப்பட்ட ஆராய்ச்சிகள், முத்துகளை பாதுகாத்தல்... போன்ற பணிகளுக்கு பிறகு 2013-ல் பொதுமக்களின் பார்வைக்கு விருந்தளித்தனர். "குகை தானே அப்படி என்ன அழகாக இருக்க போகிறது?'' என்று நினைத்தவர்கள், குகையின் அழகை கண்டு மயங்கிபோனார்கள். அந்த மாயா ஜாலத்தை வார்த்தையில் விவரிக்க முடியாது என்று உணர்ந்தார்கள். லாவோஸ்-வியட்நாம் எல்லையில் அமைந்துள்ள இந்தக் குகை, 150 தனித்தனி குகைகளால் ஆன ஒரு பிரமாண்ட அமைப்பாகும். 'சான் டூங்' என்றால் 'மழை ஆறு' என்று பொருள். சுமார் 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஆறு ஒடியதில், இந்த குகை உருவாகியுள்ளது. மலையின் சுண்ணாம்புப் பாறைகளை இயற்கைச் சிற்பியான ஆறு அரித்து, உள்ளே கண்கவரும் பிரமாண்ட சிற்பங்களை உருவாக்கியுள்ளது. குகையினுள் அமைந்திருக்கும் 'டாக்'ஸ்' பா' என்ற பாறையை பார்க்க நாயின் பாதம் போலவே உள்ளது. 'குகை முத்துக்கள்' என்பது இயற்கையின் மற்றொரு அற்புத படைப்பாகும், பல நூற்றாண்டுகளாக மணல் துகள்களின் மேல் ஆற்றுநீர் சொட்டு சொட்டாக வடிந்து, இந்த அழகிய படிமானங்களை உருவாக்கியுள்ளது. இப்படி பல்வேறு அதிசயங்கள் நிறைந்திருக்கும் சான் டூங் குகை காடுகளை 'கார்டன் ஆப் ஈடம்' என்று அழைக்கின்றனர்.



அடர்ந்த வனம் உருவாகி, அதில் பறக்கும் நரி, இருவாச்சி, குரங்கு, பூச்சி வகைகள் போன்ற பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன.



         ஆக்ஸாலிஸ் என்ற சுற்றுலா நிறுவனம், இந்த குகைக்குள் மக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. இருப்பினும் மிகக் குறைந்த அளவு பயணிகளை மட்டுமே அனுமதிக்கின்றனர். இந்த சுற்றுலா சுவாரசியமும், திகிலும் கலந்த சுகமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள் தேடல் மீது காதல் உள்ளவர்கள்.


  

1 comment:

  1. Play Slots at the best casinos - DrMCD
    Play 안산 출장안마 our online 안동 출장샵 slots at our best casinos. Play the most 과천 출장마사지 exciting casino slots 천안 출장안마 at DrMCD today. ✓ 경기도 출장샵 100% bonus up to €400!

    ReplyDelete

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...