Welcome to Knowledge Hub, where curiosity is encouraged and knowledge is celebrated. Join us as we explore the world, learn new things, and expand our minds together
Thursday, 30 August 2012
பதிவுமூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் 1,185 பேர் தேர்வு
பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட,
முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று
வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த
2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு
செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரசு பள்ளி உள்கட்டமைப்புக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்த, நபார்டு வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்துள்ளது. இதுதொடர்பாக, நபார்டு வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை
மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின்
கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப்
பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook சேலையூர் சீயோன் பள்ளி மீது புதிய புகார்
சர்ச்சைக்குரிய சீயோன் பள்ளி மீது, பெற்றோர்,
புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளனர். தாம்பரத்தை அடுத்த சேலையூர்
சீயோன் பள்ளி பேருந்து கட்டணம் வசூலித்துவிட்டு, ஒன்பதாம் வகுப்பு
மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்
பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப்
பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக்
கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்
பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப்
பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக்
கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
Tuesday, 28 August 2012
டி.இ.டி: தேர்ச்சி பெற்றவர்களில் 68% பேர் பெண்கள்
சென்னை: டி.இ.டி. தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர்
புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி
பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல்
மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.
டி.இ.டி. தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்&' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.
டி.இ.டி. தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்&' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.
மீண்டும் நடத்தப்படுகிறது ஆசிரியர் தகுதித் தேர்வு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது .
Friday, 24 August 2012
குரூப் எஸ்.எம்.எஸ்(GROUP & BULK SMS) உச்சவரம்பு 5ல் இருந்து 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.0
குரூப் எஸ்.எம்.எஸ்.,களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் 5 எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்ப முடியும் என்ற உச்சவரம்பை 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
Thursday, 23 August 2012
பள்ளி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு ஊக்கத்தொகை
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, ஊக்க உதவித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தில், உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளி விளையாட்டு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும்; கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன.
Wednesday, 8 August 2012
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும்: தமிழக அரசு
தனியார் பள்ளிகளுக்கு
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும்
என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்
உள்ள தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை தமிழக அரசால்
அமைக்க்பட்ட கல்விக் கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்து அறிவித்தது. இதனை எதிர்த்து சில சி.பி.எஸ்.இ.
பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை
தாக்கல் செய்துள்ளன.
கல்வி உதவி கையாடல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றத் திட்டம்
கல்வி
உதவித் தொகை கையாடல் வழக்கை சிபிசிஐடி அல்லது லஞ்ச ஒழிப்பு தடுப்புப்
பிரிவுக்கு மாற்ற மாவட்டக் காவல் துறை திட்டமிட்டுள்ளது. சுகாதாரமற்ற
தொழில் புரிவோர் குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையை
பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளின் பெயரிலும் பட்டியல் தயாரித்து
கையாடல் செய்ததாக நாமக்கல்
மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி
தலைமையாசிரியர்கள் 77 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Subscribe to:
Posts (Atom)
iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone
iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...
