Thursday 27 June 2019

டெல்லி: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, INSPIRE (Innovation in Science Pursuit for Inspired Research) உதவித்தொகை

டெல்லி: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை,  INSPIRE (Innovation in Science Pursuit for Inspired Research) உதவித்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆண்டுதோறும் 10 ஆயிரம் INSPIRE உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.80,000 வழங்கப்படுகிறது.
இந்தத் தொகையில், ரூ.20,000, கோடைகால ஆராய்ச்சி ப்ராஜெக்டை மேற்கொள்ள வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள்,  ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு முடித்து, இந்தியாவில், இயற்கை அல்லது அடிப்படை அறிவியல் துறைகளில், B.Sc., B.Sc., (Honours), Four year BS and five year integrated M.Sc., or BS - MS ஆகிய படிப்புகளில் ஏதேனுமொன்றை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

மேலும், 12ம் வகுப்புத் தேர்வில், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற முதல் 1 சதவிகித மாணவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் மற்றும் தேசிய நுழைவுத் தேர்வில் குறிப்பிட்ட ரேங்க் பெற்ற மாணவர்களுள் ஒருவராகவும் வர வேண்டும்.
இது மட்டுமின்றி, கூட்டு நுழைவுத் தேர்வு (Main and Advanced) மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் முதல் 10 ஆயிரம் இடங்களுக்குள் வருபவர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க www.online-inspire.gov.in என்ற வலைதளம் செல்க. நவம்பர் 30ம் தேதி வரை, ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். மேலும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களையும் upload செய்ய வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அதில் ஒட்டி, விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, தேவையான ஆவணங்களின் நகல்களுடன், Director, National Institute of Science Technology and Development Studies, Dr. K.S. Krishnan Marg, New Delhi - 110 012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். டிசம்பர் 9ம் தேதிக்குள் சென்று சேரும் விதமாக, சாதாரண தபாலிலேயே அனுப்ப வேண்டும்.
தபால் உரையின் மீது, "Application for INSPIRE scholarship for the year 2013" என்று குறிப்பிட வேண்டும். டிசம்பர் 9ம் தேதிதான் விண்ணப்பித்தலுக்கான கடைசி நாள்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...