Tuesday 25 June 2019

பெண்கள் படிக்க உதவித்தொகை

பெண்கள் படிக்க உதவித்தொகை
சிறுபான்மை மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை!
1,873 பேர் பயன் பெறலாம்
கல்வியில் சிறந்து விளங்கிபொருளாதாரச் சூழல் காரணமாகக் கல்வியைத் தொடர முடியாமல் சிரமப்படும் சிறுபான்மையினமாணவிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில்மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசியக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தை ஏற்படுத்திஉள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள்கிறிஸ்து வர்கள்சீக்கியர்கள்பௌத்தர்கள்பார்சி மற்றும் சமண மதங்களைச்சேர்ந்த பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


இந்தத் தொகை பிளஸ்-1 படிக்கும்போது ரூ.6 ஆயிரம் மற்றும் பிளஸ்-2 படிக்கும்போது ரூ.6 ஆயிரம் என இரு தவணைகளில்வழங்கப்படுகிறதுகல்வி உதவித்தொகைகல்விக் கட்டணம்பாடப்புத்தகம்எழுது பொருட்கள் மற்றும் விடுதிக் கட்டணங்களுக்காக இதுவழங்கப்படுகிறதுஇந்தத் திட்டத்தில் நடப்பாண்டில் தமிழ்நாட்டில் படிக்கும் 1,873 சிறுபான்மையின மாணவிகளுக்கு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கு எஸ்.எஸ்.எல்.சிதேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று கல்வி ஆண்டில் மத்தியமாநில அரசால்அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ்-1 படிப்பவராக இருக்க வேண்டும்விண்ணப்பத்துடன்பள்ளிக்கூடச் சேர்க்கை அனுமதிச்சீட்டுக் கடிதம் நகல் இணைக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்ரூ.1 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்வருமானச் சான்றிதழ்ஓய்வூதியம்ஆணை ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத் தாளில் உறுதி ஆவணம் அவசியம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் படிக்கும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்கவேண்டும்இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்களை www.maef.nic.in என்றஇணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
கல்வி நிலையத் தலைமை ஆசிரியர் அல்லது தாளாளர்தங்கள் கல்வி நிலையத்தில் பிளஸ்-1 படிக்கும் சிறுபான்மையின மாணவிகளிடம்இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சரிபார்த்துஅத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களுடன் ‘The Secretary, Maulana Azaad Education Foundation, (Ministry of Minority Affairs, Government of India) Chelms Ford Road, New Delhi-110155’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
பிளஸ்-2 உதவித்தொகை பெற அந்த மாணவிகள் பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற விவரங்களை டெல்லி முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.ஆன்லைன் மூலம் நவம்பர் 15ம் தேதி வரையில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்விண்ணப்பங்கள் சென்றுசேரக்கடைசி நாள்: NOVEMBER.கல்வி உதவித்தொகைபெண்கள் பிஹெச்.டி படிக்க உதவித்தொகை
பெண்கள் பிஹெச்.டி படிக்க உதவித்தொகை
சுவாமி விவேகானந்தர் ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகைத் திட்டம் என்ற திட்டத்தைப் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசிசெயல்படுத்திவருகிறதுஅதன்படிபிஹெச்.டிபடிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தையாக   இருக்கவேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில்சமூக அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக தேர்வு செய்துமுழு நேரக் கல்விமுறையில் பிஹெச்.டி., படிக்க வேண்டும்பொதுப் பிரிவினர் 40 வயதுக்குள்ளும்எஸ்.சி., எஸ்.டி., மற்றும் .பி.சி., பிரிவினர் 45 வயதுக்குள்ளும்இருக்க வேண்டும்முதல் இரண்டு ஆண்டுகளுக்குமாதம் ரூ.12 ஆயிரத்து 400, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குமாதம் ரூ.15 ஆயிரத்து 500 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: JUNE மேலும் விவரங்களுக்குwww.ugc.ac.in

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...